தீபாவளி “திருநாள்”

பாவளி திருநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில் உருவான ஜீவா – நயன்தாரா நடித்த “திருநாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது.
 
கடந்த 2006ம் ஆண்டு திபாவளி அன்று ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான “ஈ” பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. தற்போது அதே ஹிட் காம்பினேஷன் மீண்டும் இணைந்திருக்கும் படம் “திருநாள்” என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 
இப்படத்திற்கு இசை ஸ்ரீ, ஒளிப்பதிவு மகேஷ் முத்துசுவாமி, எடிட்டிங் வி.டி.விஜயன், கலை சீனுராவ், ஆக்ஷன் சூப்பர் சுப்பராயன். இத்திரைப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ளார்.