சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவக்கம்

Wind Chimes Media Entertainments நிறுவனத்தின் தயாரிப்பில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர். மணிகண்டன் இயக்குகிறார். இவர் இயக்குனர் ‘ஈரம்’ அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் ஆவார். காளிவெங்கட், திருமுருகன், ஜெயகுமார், மைம் கோபி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.
 
இப்படத்திற்கு இசை – சமீர் சந்தோஷ்; ஒளிப்பதிவு – ஆனந்த் ஜீவா; கலை – தேவராஜ்; எடிட்டிங் – சந்தோஷ் சூர்யா; ஸ்டண்ட் – பில்லா ஜெகன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆர்.மணிகண்டன்.