Yaanum Theeyavan Movie Review

தங்கள் காதலுக்கு பெற்றவர்கள்’ பெரிதாக மறுப்பு சொன்னதால் , நண்பர்கள் உதவியுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்ட அஸ்வினும் , வர்ஷாவும். ., அதே நட்புஉதவியுடன் நகருக்கு ஒதுக்குப் புறமானஒரு வீட்டில் சில நாட்களுக்கு வசிக்கின்றனர். அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் ., அஸ்வினிடம் ஏற்கனவே ஒரு பிரச்சினையில் அடி உதைப் பட்டு முகத்தில் கோர தழும்பும் வாங்கி .,அஸ்வினைத் தேடி வரும் தாதா ராஜுசுந்தரமும் அவரது ஆட்களும் தலைமறைவு வாழ்க்கை நடத்துவது அஸ்வினுக்குத் தெரியாது .இந்நிலையில் ராஜு சுந்தரம் அந்த வீட்டில் வைத்து தன்னுடன் உல்லாசமாக இருக்க வந்த ஒரு பெண்ணை கொலை செய்ய ., அதை அஸ்வினின் காதல் மனைவி வர்ஷா பார்த்து விட்டு அஸ்வினிடம் கூற , இருவரும் அங்கிருந்து தப்பித்து போகத்தயார் ஆகும் சூழலில்., அங்கு நிற்கும் அஸ்வினின் காரை வைத்து அவரையும் , வர்ஷாவையும் சுற்றி வளைக்கும் ராஜூ சுந்தர மும், அவரது ஆட்களும் அஸ்வின் – வர்ஷா ஜோடியை அலேக்காக த தூக்கி தங்கள் பழைய பகையை தீர்த்துக் கொள்ள சித்ரவதை செய்கிறார்கள் .

வர்ஷாவை அனுபவித்து விட்டு பின் , அவரையும் ,அஸ்வினையும் அடித்துக் கொன்று விட்டு கொல்ல நினைக்கும் ராஜூ சுந்தரத்தின் எண்ணம் ஈடேறியதா ? அல்லது அஸ்வினின் ஆக்ஷன் அவதாரத்தால் தவிடு பொடியானதா ..? என்னும் வினாவிற்கு வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விடை சொல்ல முயன்றிருக்கிறது “யானும் தீயவன்” படத்தின் கதை மொத்தமும்!

மைக்கேல் , எனும் கேரக்டரில் , ஆறடி உயரத்தில் அறிமுகமாகியிருக்கும் அஸ்வின் ஜெரோமுக்கு ரொமான்ஸ் ஓ.கே .ஆக்ஷன் டபுள் ஒகே எனலாம். . தனக்கேற்ற கதைகளை சரியாக தேர்வு செய்து முயற்சித்தால் அஸ்வின் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வரலாம்! செள ம்யா, எனும் பாத்திரத்தில் தோன்றி நன்றாகவேநடித்து .. இருக்கும் வர்ஷா , நடிப்பிலும் கிளாமரிலும் ரசிகனை கவார்ந்திழுக்கிறார். பாக்ஸராக , தாதாவாக டான்ஸர் ராஜூ சுந்தரத்தை பாக்ஸராக, பலே கில்லாடி டானாக ஏற்றுக்கொள்ளவது கொஞ்சம் கஷ்டமாகத் தெரிகிறது. காவல் அதிகாரி – பொன்வண்ணன் , வழக்குறைஞர் விடிவி.கணேஷ் , அைமச்சர் சந்தானபாரதி, , தோழி -மதுமிதா, தோழன் -அருன் ராஜா காமராஜ் , பெற்றோர்பாய்ஸ் ராஜன் , மீரா கிருஷ்ணன் … ஆகிய அனைவரும் தங்கள் பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *