Space Kidz India News & Stills

 

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா வழங்கும் – இந்தியாவுக்காக நான் – 2017

இந்தியாவுக்காக நினை, ஊக்குவி, கண்டுபிடி, உருவாக்கு

 

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, அமைப்பானது பள்ளி , கல்லூரி மாணவர்களுக்குச் சர்வதேசத் தரத்திலான அறிவியல், தொழில்நுட்ப, கலை மற்றும் கலாசார கற்பித்தல் அனுபவத்தைக் கொடுத்துவருகிறது.  நாசா விண்வெளி  மையம் மற்றும் யுரோ விண்வெளி மையங்களுக்கான இந்தியாவுக்கான முதல் தூதர், மாஸ்கோவைச் சேர்ந்த யூரி காகரின் விண்வெளி மைய – விண்வெளி வீரர் பயிற்சிக்கான இந்தியாவுக்கான தூதர் மற்றும் முதன்முதலாக இந்திய மாணவர்கள் பலூன் செயற்கைக்கோளை செலுத்திய வகையில் லிம்கா சாதனைபுத்தகத்தில் இடம்பெற்ற பெருமைகள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுக்குச் சேரும்.

 

முறையான கல்விகள் இல்லாமல்  கடந்த 60 ஆண்டுகளாக ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனைகூட இல்லாமல் இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த அறிவு மங்கிக் கிடப்பதையடுத்து, இந்திய குழந்தைகள் விண்வெளி ஆராய்ச்சிப் படிப்பின் மீது ஆர்வம் காட்டும் விதமாக “இளம் இந்திய விஞ்ஞானி” என்கிற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்கள். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பானது , முழுக்க முழுக்க இந்திய குழந்தைகள் மத்தியில் விண்வெளி கனவுகளைத்தூண்டி அவர்களுக்கு விண்வெளி குறித்த ஆராய்ச்சிக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கமளிப்பது மட்டுமே அன்றி வணிகரீதியில் ஆதாயம் அடையவிரும்பும் அமைப்பல்ல.

 

2017 க்கான இளம் சாதனையாளர் , மேல் நிலைப்பள்ளி மாணவர்களிலிருந்து சிறப்பான அறிவாற்றலை வெளிக்கொணரும்  தலைமைப்பண்பு மிக்க மாணவர்களை, சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளில் கொண்டாடப்படும் தேசிய இளைஞர் தினத்தன்று கண்டுபிடிக்கும் தனித்துவமிக்க தேடலே!

 

முதல் தடவையாக இந்தியாவில் இந்தியாவுக்காக , இந்தியாவுக்காக நான் என்கிற போட்டியை நான்காவது முறையாக நடத்துகிறது. கல்லூரி மாணவர்களுக்கான இந்த போட்டியில் திறமையான மாணவர்களின் ஆராய்ச்சி சார்ந்த துறைகளின் கண்டுகொள்ளப்படாத திறமைகள் வெளிக்கொணரப்படுகின்றன. அவர்களின் பொங்கிவழியும் ஆராய்ச்சி அறிவுக்கு நல்ல மேடையை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைத்துக் கொடுக்கிறது. மாணவர்கள் சுய நிறைவு, பொருட்களின் ஆக்கம், உற்பத்தி , கண்டுபிடித்தல்  மற்றும் உருவாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டு எளிதான விலைகளில் அவற்றைக் கிடைக்கச் செய்ய வழிவகை செய்யப்படுகிறது. மாணவர்களின் அறிவுப்பசியைத் தூண்டி புதியவற்றிற்கான கனவு, கண்டுபிடித்தல் மற்றும்  நனவாக்கி உருவாக்குதலில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது. இந்தியாவில் உற்பத்தி என்கிற கோஷம் ஏன்..? அதற்குப் பதிலாக இந்தியாவுக்காக உற்பத்தி, அதுவும் ஒரு இந்தியரால் என்று ஏன் இருக்கக்கூடாது.

 

இந்தியாவுக்காக நான் என்னும் இந்த அறிவியல் மற்றும்  தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான சவாலில் இந்தியாமுழுவதும் இருந்து 400 மாணவர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். அவற்றில் 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேரடியாகத் தங்களது திறமைகளை அரங்கேற்றுகிறார்கள். வெற்றிபெற்றவர்களுக்கு மாஸ்கோ வான்வெளி கல்வி நிலையத்தில் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் கண்டுபிடித்தவற்றுக்குக் காப்புரிமை பெறப்பட்டு, அவை இந்தியர்களுக்குச் சமர்ப்பிக்கப்படும்.

 

இந்த நிகழ்ச்சியில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், மாஸ்கோ ஏவியேசன் இன்ஸ்ட்டியூட், ரேடியோ பார்ட்னராக ரேடியோ ஒன், சமூக வலைத்தள பார்டனராக வாவ் செலிபிரேஷன்ஸ் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். பிப்ரவரி 3, 2017 ல் நடக்கும் இந்த போட்டியில் இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.

Space Kidz India

Mission Education

————-

மரியாதைக்குரிய விருந்தினர்கள்

  1. டாக்டர் கென் ஜான்ஸ்டன் எஸ் ஆர் –  நாசாவின் ஆவணக்காப்பாளர் மற்றும் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் பயணித்த அப்பல்லோ விண்பயண பயிற்றுநர்.
  2. திரு.செளன் மாஸ் – நிறுவனர், சர்வதேச செவ்வாய் கிரக ஆராய்ச்சி மையம், ஆஸ்திரேலியா மற்றும் Tedx பேச்சாளர்.
  3. திரு.கார்த்திக் குமார் – விண்வெளி வீரர் , நெதர்லாந்து
  4. டாக்டர். ஜெயக்குமார் வெங்கடேசன் – அண்டவெளி  விஞ்ஞானி
  5. செல்வி. ஒல்கா போகசியன் – இயக்குநர், மாஸ்கோ விமானக் கல்வி நிலைய சர்வதேச விவகாரத்துறை

நிகழ்ச்சி நிரல்

நாள்: பிப்ரவரி 3, 2017,

நேரம்: 16.00 மணி முதல் 17.30 மணி வரை

இடம்: ரஷ்யன் கலாச்சார மற்றும் அறிவியல் மையம்,

54, கஸ்தூரி ரங்கா சாலை, தேனாம்பேட்டை, சென்னை

 

ஊடக்கத்துறை நண்பர்களுக்கு பணிவான வேண்டுகோள், நமது குழந்தைகள் மத்தியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள். ஏனென்றால், இந்தியாவின் மேன்மையான விஞ்ஞான அறிவினை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசென்று அப்துல் கலாம் 2020 ஐ உருவாக்க அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டியது அவசியம்.

நன்றி!

டாக்டர் ஸ்ரீமதி கேசன்

தலைமை செயல் அதிகாரி, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா

www.spacekidzindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *