Sagaa Movie Press Release

செல்லி சினிமாஸ் சார்பாக செல்வகுமார் மற்றும் ராம்பிரசாத் தயாரிப்பில், பல முன்னனி விளம்பரங்களில் பணியாற்றிய முருகேஷ் முதன் முறையாக இயக்கும் படம் “சகா”.
17 வயது முதல் 22 வயதுக்குள் சிறையில் உள்ள இளைஞர்களின் நட்பு, காதல், ஏமாற்றம், பழி வாங்குதல் போன்றவைகளை கதைகளமாக கொண்ட படம் “சகா”
இப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் அவர்களால் கடல் படத்தில் அறிமுகபடுத்தப்பட்ட சரண் மற்றும் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் ஸ்ரீ ராம், பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் பாண்டியராஜனின் மகன் நடிகர் ப்ரித்திவிராஜ் முதன்முறையாக வில்லன் வேடம் ஏற்று நடிக்கின்றார். கதாநாயகியாக பலக் மற்றும் நீரஜா நடிக்கின்றனர்.
சிங்கப்பூரை சேர்ந்த ஷபீர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 12 வயது முதலே இசை கற்றுகொண்ட ஷபீர் சிங்கப்பூரில் பல இசை விருதுகளை வென்று பிரபல இசையமைப்பாளராக திகழ்கிறார். “அலைபாயுதே, டிராபிக், ஸ்வாசம் – செண்ட்ஸ் ஆஃப் ப்ரோஸ்” ஆகிய இசை ஆல்பம்களை வெளியிட்டு சிங்கப்பூரில் பெரும் இசைப்புரட்சியை செய்து பலரது மனதை வென்றுள்ளார். இவர் இப்படத்திற்கு இசையமைப்பது இப்படத்தின் கூடுதல் பலம் என்று இயக்குனர் முருகேஷ் கூறியுள்ளார்.
நிரன் சந்தர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு ஹரிஹரன் மற்றும் கலை இயக்கம் ராஜு.
சென்னை, பாண்டிசேரி, நாகப்பட்டினம், கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேஷ் ஆகிய இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது.
இப்படத்தை பற்றி இயக்குனர் முருகேஷ் கூறுகையில், “சகா திரைப்படம் குற்றம் செய்து சிறையில் உள்ள இளைஞர்கள் புதிய வாழ்வை அடைய துடிக்கும் அவர்களுக்கு வரும் தடைகளையும் அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தையும் அப்பட்டமாக அப்படியே காட்டியுள்ளோம். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறந்த முறையில் வந்துள்ளன, மேலும் இந்த வருட சிறந்த பாடல்கள் வரிசையில் சகா படத்தின் பாடல்கள் கண்டிப்பாக முன்னனியில் இருக்கும்” என்று கூறினார்.
படபிடிப்பு முடிந்த நிலையில் தற்போது சகா படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியிடு விரைவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *