Cinema Rendezvous Press Release and Bala Kailasam Memorial Award 2015 Invite

CINEMA RENDEZVOUS – Oct ’15

சினிமா ராண்டேவு (Cinema Rendezvous) ஓர் அறிமுகம்

சினிமா ராண்டேவு ஒரு பதிவுசெய்யபட்ட லாபநோக்கமில்லாத அறக்கட்டளை.

நடிகை மற்றும் தொழிலதிபர் சைலஜா செட்லூர் இதன் நிறுவனர் மற்றும் நிர்வாக

அறங்காவலர். திரைப்பட இயக்குனர்கள் நாகா மற்றும் அருண்மணி பழனி

ஆகியோர் இதன் அறங்காவலர்கள். சவேரா ஹோட்டல் இணை இயக்குனர் நீனா

ரெட்டி ஆதரவுடனும், நல்லுள்ளம் கொண்ட புரவலர்கள் குழுவின் ஆதரவுடனும் இந்த

அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

CR அறக்கட்டளை, கலை மற்றும் கலாச்சாரம் சார்ந்த தளங்களில் படைப்பாற்றல்

கலைகள் மூலமாக சமூக உரையாடல்களை நிகழ்த்தி வருகிறது. திரைப்படத்

திறனாய்வு மற்றும் அது தொடர்பான பயிற்சி வகுப்புகளை, குறிப்பாக கிராமப்புற

பகுதிகளிலும் நடத்துவது ஆகியவை இந் நிறுவனத்தால் சிறப்பாக திட்டமிட்டு

நடத்தப்படும் செயல்பாடுகளில் சில. மனிதநேயம், கல்வி, மற்றும் விழிப்புணர்வு சார்ந்த

சமூக முயற்சிகளை சில திரைப்படத்துறையின் அமைப்புசாரா நிறுவனங்களுக்கிடையே

இந்த அறக்கட்டளை நிகழ்த்தி வருகிறது.

தேசிய பார்வையற்றோர் அமைப்புடன் CR இணைந்து செயல்படுகிறது.

பார்வையற்றோர் நலனுக்காக நடத்தப்படும் திரைப்படம் மற்றும் கலை சார்ந்த

நிகழ்ச்சிகளை நடத்துவதில், குறிப்பாக கடைசி இரண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில்

சிறப்பாக பணியாற்றியது.

சினிமா ராண்டேவு சென்னையில் இருந்து செயல்படும் ஒரு திரைப்பட

மன்றமாக அக்டோபர் 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டடு ஒவ்வொரு மாதமும் சவேரா

ஹோட்டலில் சந்திப்புகளை நடத்துகிறது. ஒவ்வொரு “சந்திப்பும்” ஒரு திரைப்படம்

திரையிடல், சிறப்பு விருந்தினருடன் உற்சாகமான கலந்துரையாடல் என தொடர்ந்து

நடைபெறுகிறது.

திரைப்படம் பார்க்கும் பேரார்வத்தைக் கொண்டாடும் வகையில் இதனை வெறும்

பொழுதுபோக்காக மட்டும் கருதாமல் கருத்தாழம் மிக்க ஓர் அர்த்தமுள்ள அனுபவமாக

மாற்றும் நோக்கத்தில் சிறப்பாக செயல்படுகிறது. இந்த திரைப்பட மன்றம் வெவ்வேறு

விதமான உறுப்பினர்களும், சுவாரஸ்யமான பங்கேற்பாளர்களும் திரைப்படங்களைப்

பார்த்து கலந்துரையாடுவதை சாத்தியப்படுத்துகிறது. தமிழ், மற்ற மாநில மொழிகள்,

மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்களைப் பார்த்து கருத்துக்களைப்

பரிமாறிக்கொள்ளவும், தங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்களைப் பற்றி

விவாதிக்கவும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

CINEMA RENDEZVOUS – Oct ’15

இதுவரை நடைபெற்ற மாதாந்திர சந்திப்புகளில் பிரபல ஆளுமைகளான

இயக்குனர் வெற்றிமாறன், ராம், சமுத்திரகனி, ஜெயேந்திரா, சசி, பிஜோய்

நம்பியார், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, தயாரிப்பாளர்கள் சி.வி. குமார், ஜே.

சதீஷ்குமார், நடிகர் & இயக்குனர் சுஹாசினி மணிரத்னம், எழுத்தாளர்கள் சுபா,

படத்தொகுப்பாளர் லெனின் ஆகியோருடன் கலை மற்றும் ஊடகம் சார்ந்த

பிரபலங்கள் பலர் தங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும்

பகிர்ந்துகொண்டுள்ளனர். திரைப்படம் என்னும் கலையை வெவேறு வல்லுனர்களின்

வித்தியாசமான பார்வையில் கலந்துரையாடுவதே ஒவ்வொரு திரையிடலின் சிறப்பாக

அமைகிறது. தொடங்கப்பட்டது முதல் CR, திரைப்படங்களை நேசிக்கும் தனது

கனிசமான எண்ணிக்கையிலான சினிமா ஆரவலர்களின் வருகையுடன் இந்த

சந்திப்புகளை தங்கு தடையில்லாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது.

The Hindu Lit for Life’s Outreach நிகழ்ச்சியில் The Hindu உடன் CR இணைந்து

இரண்டு இலக்கிய ஆளுமைகளான யூ.ஆர். அனந்தமூர்த்தி மற்றும் வாசுதேவநாயர்

ஆகியோரின் ஆவணப்படங்களைத் திரையிட்டது.

Acting Nuanced  எனும் தலைப்பில் இயக்குனர் நாகா நெறிப்படுத்திய

நடிப்புப்பயிற்சியை மேடைநாடகங்கள், தொலைக்காட்சி, திரைப்படம் ஆகிய வெவ்வேறு

ஊடகங்ளுக்கான நடிப்பு அணுகுமுறைகள், நடிப்புக்கான நுணுக்கங்கள், ஆகியவற்றை

தொழில்முறை நடிகர்களான சில சுவாரஸ்யமான பங்கேற்பாளர்களுடன் நடத்தியது.

Cinema Minima: வளரும் திரைப்பட படைப்பாளிகளுக்கான சிறப்பு குறும்படங்கள்

திரையிடலை 2015-இல் முதல் முயற்சியாக நடத்தியது.

A Film Reviewing panel discussion- POV Matters, எனும் தலைப்பில் அண்ணா

பல்கலைக் கழகத்தில் சைலஜா செட்லூர் நடுநிலை வகிக்க, திரைப்பட இயக்குனர்கள்

ராம், நாகா, மதுமிதா, ப்ரியா ஆகிய வல்லுனர்கள் பங்கேற்பாளர்களாக

கலந்துகொண்டனர். இந்த பயிற்சி முகாமில் திரைப்பட விமர்சனத்தில் இருக்க

வேண்டிய நியாய தர்மங்கள், ஆரோக்கியமான விமர்சனம், சமூக வலைத்தளங்களின்

பொறுப்புணர்ச்சி ஆகிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டன.

சினிமா ராண்டேவு கலையம்சத்துடன் உருவாக்கப்பட்ட தகுதியுரை சான்றிதழ்

மற்றும் பணமுடிப்பு ஆகியவற்றுடன் 2015-ஆம் ஆண்டு முதல் பால கைலாசம்

நினைவு விருதை நிறுவியதில் பெருமை கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *