ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!

‘ஜிப்ரான்’ என்ற பெயர் அவரது அழகான இசையமைப்பிற்கான இசை வாசனையை உடனடியாக வெளிப்படுத்துகிறது. வழக்கமான இசையை வழங்குவதை விட்டு, அருமையான இசையை வழங்கும் அவருடைய தனித்துவமான இசை நயம் மற்றும் ஒழுக்கம் உலகளாவிய ரசிகர்களை ஈர்த்துள்ளது. உண்மையில், ஜிப்ரான் பல திரைப்பட இயக்குனர்களின் முதல் தேர்வாக இருக்கிறார். குறிப்பாக அறிமுக இயக்குனர்கள் அவரின் இசை தங்களின் திரைப்படத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் என்று உறுதியாக நம்புகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் தான் ஹன்சிகா மொத்வானி நடிக்கும் நாயகியை மையப்படுத்திய படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல்.

மகத்தான மகிழ்ச்சியுடன் இருக்கும் இயக்குனர் ஜமீல் கூறும்போது, “அது ஒரு அசாதாரணமான ஆச்சரியம். ஜிப்ரான் சார் ஏற்கனவே மிகப்பெரிய படங்களில் இசையமைப்பாளராக இருப்பதால், என் படத்துக்கு இசையமைப்பாரா? என்று சந்தேகித்தேன். பாடல்களை விட, படத்தின் பின்னணி இசை ஸ்கிரிப்டுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளார். என் கதை அவருக்கு பிடித்து போனது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் பணிபுரியும் சிறந்த அனுபவத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

ஹன்சிகா மொத்வானியின் நேர்த்தி, வலுவான ஸ்கிரிப்ட் மற்றும் ஜிப்ரானின் பொக்கிஷமான இசை – நிச்சயமாக இந்த அணிக்கான ஒரு வினோதமான தருணம். ஜியோஸ்டார் எண்டர்பிரைஸ் தயாரிப்பாளர் எம். கோடீஸ்வர ராஜு மற்றும் நிர்வாக இயக்குனர் விஜய் ராஜேந்திர வர்மா இந்த படத்திற்காக சில முக்கிய தொழில் நுட்ப வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ‘நாயகி மையப்படுத்திய படம்’ என்றவுடனேயே, ​​படத்தில் வணிக மதிப்புகள் அவ்வளவாக இருக்காது என்று கருதலாம். ஆனால் தயாரிப்பாளர்கள் உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுக்க சிறந்த கூறுகளை சேர்த்து வருகிறார்கள்.

முன்னதாக மசாலா படம், ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார் யூ.ஆர்.ஜமீல். ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் ஜமீல் செய்த வேலையால் ஈர்க்கப்பட்டார் ஹன்சிகா மொத்வானி. இந்த படத்தின் கதையை கேட்டதும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார் ஹன்சிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *