வெற்றிக்களிப்பில் மயூரன் தயாரிப்பாளர்கள்

சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி வரவில்லலை, சாஹோ வெளியாவதால் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்குமா என்று எக்கச்சக்கமான சிக்கலில் சிக்கி இருந்த மயூரன் திரைப்படம் வெற்றிகரமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 22 தியேட்டர்களிலும், தமிழகம் முழுவதுமாக மொத்தம் 72 தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆனது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றால், பெரிய படங்களுக்கு நடுவில் வந்து மயூரன் மக்கள் மத்தியில் நல்லபடம் என்ற பெயரை வாங்கி இருப்பதோடு மட்டுமல்லாமல், மயூரன் வசூலிலும் தயாரிப்பாளர்களுக்கு நிறைவைக் கொடுத்திருக்கிறது. மேலும் சேட்டிலைட் டிஜிட்டல் வியாபாரங்கள் பேசி வருவதால் தயாரிப்பாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கையைக் கடிக்காத பட்ஜெட்டில் படம் எடுத்து கொடுத்த இயக்குனர் நந்தன் சுப்பராயனுக்கு நன்றியை கூறும் தருணத்தில், இந்த
சிறு படத்திற்கு போதிய வெளிச்சம் கொடுத்து வெற்றிபெற செய்த
பத்திரிக்கை, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் ஊடகவியலாளர் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *