ரேடான் நிறுவனம் நடத்தும் உலகக் குறும்பட விழா ரேடான் மீடியா நெட் வொர்க் ! பெயர் சொன்னால் போதும் ; தரம் எளிதில் விளங்கும் !

அதி நேர்த்தியான  தயாரிப்பு மற்றும் விநியோக உத்திகளோடு வெள்ளித் திரை மற்றும் சின்னத் திரை இரண்டிலும் கொடி நாட்டிக் கோலோச்சும் இந்த நிறுவனம் இப்போது , ரேடான் குறும்பட விழாவின் மூலம் (Raadan Short Film Festival – RSFF). குறும்படத் துறையிலும்  காலடி எடுத்து வைத்துள்ளது  .
 
இது பற்றி  தெளிவாகவும் விளக்கமாகவும் கூறும் ரேயான் “இந்த குறும்பட விழாவில் கலந்து கொள்ளும் படங்களுக்கான அறிவிப்பு 2015 நவம்பரில் கொடுக்கப்பட்டது .  தேசிய அளவில்  மற்றும் உலக அளவில்   என்று இரண்டு பிரிவுகளின் கீழ் 200க்கும் மேற்பட்ட படங்கள் எங்களுக்கு வந்தன.. 
 
அதில் இருந்து 25 படங்கள் முதல் கட்டமாக தேர்ந்து எடுக்கப்பட்டன. அவை யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டன. .
 
அவற்றில் மிகச் சிறந்த பத்துப் படங்கள் தேர்வாகி திரு சரத்குமார் , திருமதி லக்ஷ்மி ராம கிருஷ்ணன் ஆகிய நடுவர்களுக்கு அனுப்பப்பட்டன  இவர்களுடன் இயக்குனர் பாலாஜி மோகன் , கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் ரத்னவேல் , எடிட்டர் ஆண்டனி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இணைந்து தேசிய அளவில் ஆறு படங்களையும் , உலக அளவில் முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு பெறும் படங்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள் .  
 
முதல் பரிசு பெற்ற படத்தை உருவாக்கிய படக் குழுவுக்கு இயக்குனர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், ஒளிப்பதிவாளர் அரவிந்த், படத் தொகுப்பாளர் கே எல் பிரவீன் , நடிகர்கள் எம் எஸ் பாஸ்கர் மற்றும் மோகன்ராம் , வசனகர்த்தா பார்த்திபன் ஆகியோர் இணைந்து , ஒரு நாள் தொழில் நுட்பப் பயிற்சிப் பட்டறை   நடத்தி சிறப்பித்தார்கள் 
 
இப்பொழுது  அந்தப் படக் குழுவுக்கு ஒரு புது குறும்படத்தை இயக்கும் பணி  கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படம் வரும் மார்ச் 9 ஆம் தேதி சத்யம் சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. 
 
அதன் பிறகு அந்தப் படக் குழுவுக்கு பணப் பரிசு வழங்கப்பட உள்ளதோடு  பிரபல நிறுவனங்கள் உருவாக்கும் படத்தில் பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்படும் . எங்கள் சார்பில் இவர்களை வைத்து எங்கள் நிறுவனம் படம் ஒன்றையும் தயாரிக்கும் .. 
 
  இதன் மூலம் திரையில் நுழைய போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு புதிய வழி பிறக்கிறது என்பது என் கருத்து  அதனால் இது மாதிரி ஒரு விழாவை நடத்துவதில் நான் ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன் . “என்கிறார் , ஒருவித உற்சாகப் பாய்ச்சலோடு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *