மிஸ் தமிழ் சென்னை ( Miss Tamil Chennai) – போட்டியாளர்கள் தேர்வு

உலக தமிழ் வம்சாவளி அமைப்பு தனது அடுத்த பயனக்கல்லாக Miss Tamil Chennai 2017-யை ஏற்று நடத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. இந்நிகழ்வானது நம் தாய் தமிழ் பெண்களுக்கு விளம்பரம் மற்றும் திரைத்துறையிலும் ஒர் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுக்கும். தற்போது இந்நிகழ்வின் முதல் மூன்று சுற்றுக்கள் நிறைவடைந்து, இறுதி சுற்றினை வரும் October 7ம் தேதி சென்னையில் நடத்த இருக்கிறது. இந்நிகழ்வில் பலத்தரப்பட்ட தமிழ் பெண்கள், குறிப்பாக மருத்துவம், இஞ்சினியரிங், பேஷன் போன்ற துறைகளில் இருந்தும், புதுச்சேரி, வேலுஈர், திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்தும் தனது திறமைகளை நடுவர்கள் முன் திறம்பட செய்துக்காட்டினர். ஆடல், பாடல், பேச்சு, பாரம்பரிய ஆடை உடுத்துதல், தமிழ் உச்சரிப்பு போன்ற போட்டிகளால் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் தேர்வு செய்யப்படும் பெண்கள் January மாதம் நடைபெறும் Miss Tamil Universe நிகழ்விலும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பையும் நல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *