மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே விரைவில் வெளியாகும் “ஒரு நாள் இரவில்”

இயக்குனர் விஜய்யின் திங் பிக் ஸ்டுடியோஸ் மற்றும் பால்சன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடட் இணைந்து தயாரித்து, ஆண்டனி இயக்கத்தில், சத்யராஜ், அணு மோல், யூகி சேது, வருண் (அறிமுகம்) மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “ஒரு நாள் இரவில்”.

“நைட் ஷோ” என்று முதலில் பெயரிடப்பட்ட இப்படத்தை பார்ந்த பிரபலங்கள், படம் ஜனரஞ்சகமான முறையில் விருவிருப்பு சற்றும் குறையாமல் எடுக்கபட்டிருப்பதால், இன்னும் ஏதுவான பெயர் படத்திற்கு வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூற, மிகுந்த யோசனைக்கு பிறகு படத்திற்கு “ஒரு நாள் இரவில்” என்று பெயர் மாற்றத்தை செய்திருக்கிறார்கள்.

இந்த பெயர் கதைக்கு ஏற்றாற் போல் சிறப்பாக அமைந்துள்ளதாக அனைவரும் பாரட்டினர்.

மலையாளத்தில் விமர்சன ரீதியாக பாராட்டப் பட்ட ”ஷட்டர்” என்னும் திரைப்படத்தின் தமிழாக்கம் தான் “ஒரு நாள் இரவில்” என்பது குறிப்படத்தக்கது.

இயக்குனர்கள் ஷங்கர், AR.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், லிங்குசாமி மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோருக்குதொடர்ந்து படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ள ஆண்டனி, தற்போது “ஒரு நாள் இரவில்” படம் மூலம்  இயக்குனராகஅறிமுகமாக உள்ளார்.

படத்தை பார்த்த தணிக்கை குழு, படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, தற்போது “ஒரு நாள் இரவில்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

Cast

சத்யராஜ்

யூகி சேது

வருண் (அறிமுகம்)

அணு மோல்

  1. R. சுந்தர்ராஜன்

கல்யாணி நட்ராஜன்

திக்ஷித்தா

 

Crew

AL.அழகப்பன்………………………………….. தயாரிப்பாளர் (Think Big Studios)

சாம் பால்…………………………………………… தயாரிப்பாளர் (Paulsons Media Pvt Ltd)

ஆண்டனி………………………………………….. திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்கம்

ஜாய் மேத்தியூ……………………………. கதை

M.S. பிரபு…………………………………………….. ஒளிப்பதிவு

யூகி சேது………………………………………….. வசனம்

நவின் ஐயர்…………………………………….. இசை

நா. முத்துக்குமார்…………………….. பாடலாசிரியர்

  1. ராஜேஷ்…………………………………………. கலை இயக்குனர்

சதீஷ்……………………………………………………….. நடன இயக்குனர்

ரமணா……………………………………………………. உடைகள்

வேணு……………………………………………………. ஒப்பனை

R.S. ராஜா……………………………………………. புகைப்படம்

நிகில்……………………………………மக்கள் தொடர்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *