நயன்தாராவிற்கு ஜோடியாக கவுரவ தோற்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி

சுவாரஸ்யமான , பெரிய நடிகர்களை ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்வது பேச்சு வாக்கில் மட்டுமே சுலபமான காரியம் . அதனை செயல் படுத்துவது அவ்வளவு கடினமாகும். ஆனால் இந்த கலையை நன்கு அறிந்த வல்லுநர் ‘Cameo Films’ C J ஜெயக்குமார் அவர்கள் . அவரது தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை அஜய் ஞானமுத்து இயக்குகின்றார். இப்படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக, ஒரு கவுரவ தோற்ற கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி – நயன்தாரா ஜோடி ஏற்கனவே ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் ஜோடியானது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடியின் மேஜிக் இப்படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்காக விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பை இன்று தொடங்கவுள்ளார். 2018 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘இமைக்கா நொடிகள்’ ஆகியுள்ளது எனக்கூறப்படுகிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகவுள்ளது . இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை அடைந்துள்ளது.

‘Cameo Films’ C J ஜெயக்குமார் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில், R D ராஜசேகர் ஒளிப்பதிவில் , புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் ‘இமைக்கா நொடிகள்’ உருவாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *