நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் ஜெய் கதாநாயகனாக நடிக்கும் ஜருகண்டி

நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வந்த நாளிலிருந்தே அப்படத்தின் தலைப்பு குறித்து பரவலான எதிர்பார்ப்பும் யூகங்களும் உருவாகியிருந்தது. இந்த யூகங்கள் எல்லாத்தையும் உடைக்கும் விதமாக இப்படத்தின் தலைப்பு ‘ஜருகண்டி’ என அறிவித்துள்ளார் நிதின் சத்யா.

இது குறித்து நிதின் சத்யா பேசுகையில், ” இப்பட இயக்குனர் பிச்சுமணியும் நானும் இக்கதைக்கு பொருத்தமான தலைப்பாக மட்டும் இல்லாமல், மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ளும் தலைப்பாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்தோம். அவ்வாறே ‘ஜருகண்டி’ முடிவானது. இது பிற மொழி வார்த்தையாக இருந்தாலும் நம் தமிழ்நாட்டிலும் இது பிரபலமான வார்த்தையாக இருந்து வருகிறது. நங்கள் ஷூட்டிங்கை மிகவும் எதிர்நோக்கியுள்ளோம், ஏனென்றால் இக்கதை அவ்வளவு சுவாரஸ்யமாகவும் அசத்தலாகவும் அமைந்துள்ளது. அருமையான படங்கள் வரிசையாக நடித்து வரும் , என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் ‘ஜருகண்டி’ ஒரு முக்கிய படமாக இருக்கும். பலராலும் கவனிக்கப்படும் , எதிர்பார்க்கப்படும் ரேபா ஜான் இப்படத்தின் கதாநாயகி. ரோபோ ஷங்கர், டேனி, ‘சிறுத்தை’ அமித் , இளவரசு , மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். போபோ சஷி இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். K L பிரவீன் படத்தொகுப்பில், அர்வியின் ஒளிப்பதிவில் , ரேமியனின் கலை இயக்கத்தில், அஜய் ராஜின் நடன இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. இயக்குனர் பிச்சுமணியின் எவ்வளவு திறமையானவர் என்பதை இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவார்கள் ”

இப்படத்தை நிதின் சத்யாவின் ‘ஷ்வேத் ‘ நிறுவனமும் பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *