நடிகர் சங்கம் முற்றுகை போராட்டம் வாபஸ் – இந்திய தேசிய லீக் கட்சி

நடிகர் சங்கம் முற்றுகை போராட்டம் வாபஸ் ..

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் தயாரிப்பாளர் ஆதம் பாவா ஆகியோருக்கு
ஈ-மெயில் மூலம் அனுப்பிய கடிதத்தில் நான் ஏற்கனவே முகநூலில் மன்னிப்பு கேட்டு உள்ளேன் .

மீண்டும் முஸ்லீம்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்

நான் எந்த ஒரு மதத்திற்க்கும் பாராபட்சமாக இருந்தது இல்லை என்னுடைய நாடக குழுவில் சுமார் 10 ஆண்டுகளாக முஸ்லீம்கள் உள்ளனர் ..

எனவே நான் முஸ்லீம்களுக்கு எதிரி அல்ல

நான் கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் , மதம் , சார்ந்த அமைப்புகளில் இல்லை நாடகம் மற்றும் சினிமா போன்றவற்றில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகின்றேன் ..

நான் எப்போதுமே இது போன்று செய்தது இல்லை இந்த முறை கவனக்குறைவால் நடந்துவிட்டது அதற்க்காக முஸ்லீம்களின் உணர்வுகளை புண்படுத்தியதிற்க்காக மன்னிப்பு கோருகின்றேன் ..

என்னுடைய இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ரமலானுக்கு அனைத்து முஸ்லீம் சகோதர , சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள் என இந்திய தேசிய லீக் கட்சிக்கு ஈ-மெயில் அனுப்பி உள்ளார்

ஏற்கனவே நடிகர் மனோபாலா தயாரிப்பாளர் ஆதம் பாவா மூலம் வாய்ஸ் மெஸஜ் அனுப்பி இருந்தது குறிப்பிடதக்கது …

இந்த முற்றுகை போராட்டம் நடத்த இருந்த சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை செய்து இந்திய தேசிய லீக் கட்சி இன்று 08-07-2016 மாலை 3-00 மணிக்கு நடத்த இருந்த நடிகர் சங்க முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்படுகின்றது …

அதே நேரத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் மீது கொடுத்த புகார் இந்திய தேசிய லீக் கட்சி வாபஸ் பெறாது என்பது குறிப்பிடதக்கது …

அன்புடன்
தடா ஜெ.அப்துல்ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *