தடையை உடைத்து 9-ம் தேதி ரிலீஸாகிறது ‘கத்துக்குட்டி’

நரேன் – சூரி நடிப்பில் அக்டோபர் முதல் தேதி ரிலீஸாகயிருந்த கத்துக்குட்டி திரைப்படம், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் திரைக்கு வராமல் போனது. தயாரிப்பாளர் ஒருவர் பண ரீதியாகத் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவைப் பிறப்பித்தது நீதிமன்றம்.

இந்நிலையில் ‘கத்துக்குட்டி’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.ராம்குமார் நீதிமன்றத்தை அணுகி, நீதியரசர் ரவிச்சந்திர பாபு முன்னிலையில் 58 லட்ச ரூபாயை நீதிமன்றப் பதிவாளர் பெயரில் கட்டினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர் படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து வரும் அக்டோபர் 9-ம் தேதி தமிழகம் முழுக்க ரிலீஸாகிறது ‘கத்துக்குட்டி’ திரைப்படம். கிராமியப் பதிவாகவும் காமெடி கொண்டாட்டமாகவும் திரைக்கு வரவிருக்கிறது ‘கத்துக்குட்டி’.

For any clarification regarding court order, Please contact Advocates Mr.Amalanadan @ 9940699277 & Mr. D.Ravichandar @ 9442135959

Director Mr. Era Saravanan Contact No. 9840903585

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *