சேலம் ஆர்ஆர் குழும தலைவர் ஆர்.ஆர். தமிழ்செல்வனுக்கு ‘தொழில் முனைவோர் தலைமைத்துவ விருது’

சேலம் ஆர்ஆர் குழும தலைவர் ஆர்.ஆர். தமிழ்செல்வனுக்கு ‘தொழில் முனைவோர் தலைமைத்துவ விருது’

இம்மாதம் புது தில்லியில் நடைபெற்ற அக்ரிகல்ச்சர் டுடே குழுமத்தின் தேசிய அளவிலான ‘9 வது விவசாய தலைமைத்துவ விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சியில், சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் சேலம் ஆர்ஆர் குழுமத்தின் தலைவர் ஆர்.ஆர்.தமிழ்செல்வனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மேதகு கேரள ஆளுநரும், முன்னாள் நீதியரசருமான பி.சதாசிவம், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாராளுமன்ற உறுப்பினரும் பிரதமரின் ஜி 20 நாடுகளுக்கான செர்பாவுமான சுரேஷ் பிரபு மற்றும் அக்ரிகல்ச்சர் டுடே குழும தலைவரும் இந்திய உணவு மற்றும் விவசாய கவுன்சிலின் தலைவருமான எம்.ஜே. கான் உள்ளிட்ட பல முக்கிய அரசுத்துறை முக்கிய அதிகாரிகள் மற்றும் தொழில்துறையைச் சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆரம்ப காலங்களில் மிகச்சிறிய அளவில் எளிமையாக துவங்கப்பட்ட ஒரு நிறுவனம், இன்று நூற்றுக்குமேற்பட்ட கிளைகளுடன், அனைவருக்கும் எட்டுகிற விலைப்பட்டியலுடன், தரமான உணவு வகைகளை சுவையுடன் மக்களுக்கு வழங்கி வருகிறது என்றால் அதுவே அவருடைய உழைப்புக்கும், தனித்துவமான தலைமை பண்புக்கும், மாண்புக்கும் கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு மற்றும் விவசாயத்துறை சார்ந்த சாதனையாளர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தை வழங்கி, ஊக்குவித்து வரும் மத்திய அரசின் இந்த முயற்சி, இத்துறை சார்ந்தவர்களை பெரிதும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *