“காற்றுவெளியிடை” -​ இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ர் ரஹ்மானுடன் காரசார உரையாடல்

தமிழ் சினிமாவில் 25 வருடம் உங்களுக்கு இடையில் கெமிஸ்ட்ரி எப்படி இருந்தது. இவ்வளவு காலம் உங்களின் இந்த பயண அனுபவம் எப்படி இருந்தது?

இசைப்புயல் தனது முகத்திற்கே உரிய எளிமையான புன்முறுவலுடன் பதில் கூற ஆரம்பிக்கிறார்….
அந்த காலக்கட்டத்தில் இயக்குநர் மணியின் படங்களை ​அதிகமாக பார்ப்பேன். முதல் முதலில் அவருக்காக இசை அமைக்கும்போது நானே என்னை பல கேள்வி கேட்டுகொண்டேன். எந்த லெவல்க்கு வேலை செய்யவேண்டும்.ஒரு இரசிகனாக அவரின் படத்திற்கு எவ்வாறு இசை அமைக்கலாம் என எண்ணினேன். அவரும் அவரின் விருப்பதை தெரிவிப்பார்.

இயக்குனர் மணி தனது வெள்ளை குறுந்தாடி தடவிய படியே பேச ஆரம்பித்தார் முதன் முதலாக அவரை சந்தித்த போதே வேற ஒரு தரத்தில் அவரின் இசை இருந்தது. அப்போதே நான் முடிவு செய்தேன். மேலும் அவரின் புதிய யோசனை என்னை மிகவும் கவர்ந்தது.

புதிய யோசனைகள் என்று சொல்லும்போது உங்கள் கூட்டணியில் பல லவ் ஸ்டோரி வந்துள்ளது. நீங்கள் எவ்வாறு அதற்கான முயற்சியை மேற்கொண்டீர்கள் .

அதற்கு மூன்று விஷயம் முக்கியம். நேரம், பணம். தரம். இது அனைத்தும் எங்களுக்கு கிடைத்தது. இதுவே நான் காரணம் என நினைக்கிறன். மேலும் ஒரு கட்டாயம் இருக்காது 5 நாட்களில் பாடல் வேண்டும் என்று கூறமாட்டார். இலக்கை எவ்வாறு அடையலாம் என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கும். மணி அவர்கள் என்னிடம் ரோஜா படத்திற்கு முன்பு சந்திக்கும் போது நீங்கள் ராஜாவுடன் இசையமை​த்​தீர்கள். பல மொழிகள் கூட மலையாளம் கன்னடம் உட்பட. உங்களிடம் தரமான இசை உள்ளது என கூறினார். அப்போது நான் எப்படி இசைபோடலாம் என தீவரமாக யோசிக்க தொடங்கினேன்.

பிறகு 5 வருடம் கழித்து வாழ்கையில் மாற்றம் ஏற்படுவதை உணரமுடிந்தது.

காற்று வெளியிடை திரைப்படம் எப்படி வந்திருக்கு…?

இருவரும் மிகுந்த சிரிப்புடன் நாங்கள் எங்களது பெஸ்ட் கொடுத்துள்ளோம். இனி மக்கள் தான் படத்தை பற்றிய கருத்தை முடிவு செய்ய வேண்டும்.

உங்கள் இருவருக்கும் இடையில் சினிமோடோக்ராப், மியூசிக் போன்ற விசயங்களில் ஆரோக்கியமான போட்டி உள்ளதா..?

தனிபட்ட விதத்தில் இருவருக்கும் எந்த போட்டியும் பொறாமையும் கிடையாது. இசை என்பது ஒரு கலை.ஒரு சில படங்களில் பாடல் தான் படத்தை முடிவு செய்யும். ​அதனால்தான் நாங்கள்​ அதற்கான​முயற்சி செய்கிறோம் என்று கூறலாம் .

கவிபேரரசு வைரமுத்து அவர்கள். கடல் படத்தில் அவரின் பங்களிப்பு இல்லாமல் இருந்த சூழ்நிலையில் அவரின் புத்தகத்தின் வரிகளுக்கு இசையமைத்தீர்கள்..அது பற்றி சில தகவல்கள்…

அவர் மிகவும் பொறுமையானவர். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். எனவே எங்களுக்கு எவ்வாறு டார்கெட் அடைவது என்று நினைப்போம். படத்திற்கு அவர் மிகப்பெரிய மரியாதையை தேடிதந்திருக்கிறார்.
எங்களுக்கு நல்ல அனுபவமாகவே இருக்கும். சில நேரங்களில் ஏற்ற இறக்கம் இருக்கும் ஆனாலும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்.

3 பேருக்கும் எதாவது ஒரு பாடல் சவாலாக இருந்திருக்கிறதா.?

எல்லா பாடலும் எங்களுக்கு சவால் தான் என்று​ A.R.​ ​ரகுமான் ​ சிரித்து கொண்டே கூறினார்.

எவ்வாறு நீங்கள் எப்போதும் வித்தியாசமான படங்களை எப்போதும் தருகிறீர்கள்…?

ஏதாவது புதிதாக செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். பல விஷயம் கேட்டு கேட்டு செய்வேன்.
எந்த இடத்தில் உங்கள் நட்பு உறுதியானது என்பதை உணர்ந்தீர்கள்…
எங்கள் அதிஷ்டம் என்று தான் சொல்லவேண்டும்.

பல இசையமைப்பாளர்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் . உங்களுக்கு அந்த எண்ணம் இருக்கிறதா?

இசைப்புயல் தனது மெல்லிய குரலில் வயசாகிறது என்று நினைக்கிறன் என்று சிரித்துகொண்டே கூறியபடியே பேட்டி நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *