கவிப்பேரரசு வைரமுத்து இன்று திறந்து வைக்கப்பட்ட மெட்வே ஹாஸ்பிடல்ஸ் சூப்பர் சிறப்பு மருத்துவமனை

Dr. டி.பழனியப்பன் அவர்களால் 2012 ஆம் அண்டு சென்னை டிரஸ்ட்புரத்தில்து வங்கப்பட்டதுதான் மெட்வே ஹாஸ்பிடல்ஸ்.நோயாளிகளை கனிவோடும் மரியாதையோடும் நடத்தி அவர்களது நோயினைத் தீர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களை குணப்படுத்தி எவ்வளவு விரைவாக அவர்கள் வீடு திரும்ப முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைப்பதுதான் இந்த மருத்துவ மனையின் தனிச்சிறப்பு.

சுருங்கச் சொல்வதென்றால் வருமானத்தை குறிக்கோளாகக் கொள்ளாமல் நோயாளியின் பிணி தீர்க்கின்ற குறிக்கோளை தாரக மந்திரமாக வைத்துக் கொண்டு செயல்படும் மருத்துவ மனையாக திகழ்வதுதான் மேட்வே ஹாஸ்பிடல்ஸ்.

கும்பகோணத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள மக்களுக்கும் தமிழகத்தின் தலை நகரத்தில் கிடைக்கும் தலை சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் .நூறு படுக்கைகளைக் கொண்ட மெட்வே பல நோக்கு மருத்துவ மனை (MEDWAY MULTI SPECIALITY HOSPITALS) 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

மெட்வே ஹாஸ்பிடல்ஸின் அடுத்த கட்ட வளர்ச்சிதான் இன்று கோடம்பாக்கம் யுனைட்டெட் இந்தியா காலினியில் பிரம்மாண்டமாக நிமிர்ந்து நிற்கும் மெட்வே ஹாஸ்பிடல்ஸ் சூப்பர் சிறப்பு மருத்துவமனை
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையிலும், மூளை மற்றும் நரம்பு தண்டு அறுவை சிகிச்சை, நீரழிவு காரணமாக கால்களில் ஏற்படக் கூடிய பாதிப்புகளையும் செய்வதில் தனி இடத்தை இன்று மெட்வே ஹாஸ்பிடல்ஸ் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் மெட்வே ஹாஸ்பிடலில் அணி வகுத்து நிற்கும் மிகத் திறமையான மருத்துவர்கள் தான்.

அதி நவீன சிகிச்சையை அளிப்பதற்குரிய எல்லா வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள மெட்வே ஹாஸ்பிடல்ஸ் சூப்பர் சிறப்பு மருத்துவமனை கோடம்பாக்கம் வாழ் மக்களுக்கு மட்டுமின்றி சென்னையில் உள்ள அனைவருக்குமே ஒரு வரப்பிரசாதமாக திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *