உதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.

ஒரு படத்தின் தலைப்பு, மிகவும் உற்சாகமூட்டும் தலைப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த தலைப்பு படத்தில் பணி புரியும் நடிக, நடிகையர் தொழில் நுட்ப கலைஞர் உட்பட அனைவரின் வாழ்விலும் எதிரொலிக்கும் என நம்பலாம்.அந்த வகையில் ஜீ வீ பிரகாஷ்- புது முகம் அர்தனா நடிப்பில் , புதிய இயக்குநர் வள்ளி காந்த் இயக்கத்தில், பசங்க productions சார்பில் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி creations பி ரவி சந்திரன் ஆகியோர் இணைந்து வழங்கும் “செம” மிகவும் positive ஆன தலைப்பாக கருத படுகிறது. இதில் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்து இருப்பவர் பசங்க 2 படத்தில்.உதவி இயக்குனராக பணி புரிந்து , “செம” படத்தில் ஒரு பிரதான வேடத்தில் நடிக்கும் ஜனா தான்.

“இயக்குநர் வள்ளி காந்த் அண்ணனுடன் பசங்க 2 படத்தின் மூலம் தான் பழக்கம்.அவர் இணை இயக்குனராக பணியாற்றிய அந்த படத்தில் நான் ஒரு உதவி இயக்குநர்.தான் படம் இயக்கினால் , எனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக அவர் கூறி வருவார். மறக்காமல் அதை செய்யவும் செய்தார். “செம” முற்றிலும் ஜனரஞ்சகமான ஒரு படம்.படப்பிடிப்பு தளமே இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே கல கலப்பாக இருக்கும். அந்த கலகலப்பு படம் முழுவதும் நிறைந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை. முதலில் கோவை சரளா, மன்சூர் அலிகான் போன்ற மூத்த கலைஞர்களுடன் நடிக்க அச்சமாக தான் இருந்தது.ஆனால் அவர்கள் கொடுத்த ஊக்கம் என் அச்சத்தை போக்கியது. ஜீ வீ பிரகாஷ் சாருக்கு இந்த படம் மேலும் ரசிகர்களை கூட்டும் என்பதில் ஐயமில்லை. யோகி பாபுவின் காமெடி வேற லெவலில் இருக்கும் என்றார்.படத்தின் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்தை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். படம் பார்ப்போர் எல்லோரையும் கவரும் வண்ணம் படம் பிடித்து உள்ள இவர் பி சி ஸ்ரீராம் சாரிடம் பயின்றவர் என்பதால் துவக்கத்தில் ஒரு இடைவெளி விட்டுத்தான் பழகினேன். ஆனால் அவருடைய இனிமையான பழக்கம் எல்லோரையும் உடனே கவர்ந்தது.வருகிற 25 ஆம் தேதி வெளி வர இருக்கும் “செம” தலைப்புக்கேற்ற படமாக இருக்கும் என உறுதியாக நம்புகிறார் ஜனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *