அஸிஸ்டென்ட் கமிஷனர் அபிமன்யு! சௌந்தரராஜாவின் புதிய அவதாரம்

அழகான, அமைதியான, ஆழமான நண்பனாக நடித்த”ஒரு கனவு போல” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிரடி அவதாரம் எடுக்கிறார்,சௌந்தரராஜா. “அபிமன்யு” படத்தில் புத்திக்கூர்மையும் சாதுர்யமும் கொண்ட அஸிஸ்டென்ட் கமிஷனராக நடிக்கிறார், சௌந்தரராஜா.இதற்காக மிகுந்த சிரத்தை எடுத்த சௌந்தரராஜா, காக்கி உடையில் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக கண்முன் நிற்கிறார். அபிமன்யுபடத்தின் தயாரிப்பு முன்னோட்டக்காட்சி வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக சினிமா பிரபலங்கள் இப்படி முன்னோட்ட காட்சிகளைவெளியிடுவது வழக்கம். ஆனால், காவல்துறை கதை என்பதால், ஒரு காவல்துறை அதிகாரி வெளியிட வேண்டும் என்று விரும்பினர்படக்குழுவினர். அவர்கள் ஆசைப்பட்டபடியே காவல்துறை உயர் அதிகாரி, அஸ்ரா கார்க், ஐ.பி.எஸ் (Asra Garg IPS) அபிமன்யு படத்தின்தயாரிப்பு முன்னோட்டக்காட்சியை வெளியிட்டு படக்குழுவினரை பெருமைப்படுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாமல்இருந்த பாப்பாபட்டி கீரிப்பட்டி தொகுதியில் தேர்தல் நடத்திக்காட்டி பெருமைக்குரியவர், அஸ்ரா கார்க் என்பது குறிப்பிடத்தக்கது.விறுவிறுப்பான திருப்பங்கள் கொண்ட திரைக்கதையுடன் தயாராகும் அபிமன்யு படத்தை அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்குகிறார். ‘ஒருகிடாயின் கருணை மனு’ படத்தின் ஒளிப்பதிவாளர் சரண் ஒளிப்பதிவு செய்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *