அஷ்மிதா குறும்பட திருவிழா – 2016

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் அறிவுரையாளராக பங்கேற்கும்  அஷ்மிதா சென்னை சர்வதேசத் திரைப்பட பள்ளியின் பிரம்மாண்ட குறும்பட விழா  பிப்ரவரி 13ம் தேதி நடைபெற இருக்கிறது.

அஷ்மிதா குறும்பட திரைப்பட விழாவில் பங்கேற்ற கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:
*குறும்பட திருவிழாவில் பங்கேற்க விரும்புவர்கள் www.asmitaedu.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தல் வேண்டும்.
*போட்டியில் பங்கேற்பவர்களுக்கு 18 வயது முதல் 30 வயது உடையவர்களாக மட்டுமே இருத்தல் அவசியம். குழுவின் மற்ற நபர்களுக்கு வயது வரம்பு இல்லை.
*அஷ்மிதா குறும்பட திருவிழா – 2016-க்கு அனுப்பப்படும் அனைத்து குறும்படங்களும் 10நிமிடத்திற்குள் இருத்தல் வேண்டும். படத்தின் டைட்டில், முடிவு அறிவிப்பு பட்டியலும் இதில் உள்ளடங்கும். குறும்படங்கள் அனைத்தும் 2015 அக்டோபர் 1 – 2016பிப்ரவரி 10 இடைப்பட்ட காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதாக இருத்தல் அவசியம்.
*அஷ்மிதா குறும்பட திருவிழா – 2016-க்கான தலைப்பு ‘உறவுகள்’ ( ‘Relationship’)
*இணையதளம் வாயிலாக முன் பதிவு செய்து கொள்ள கடைசி நாள் 10 பிப்ரவரி 2016
*போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் முன் பதிவு கட்டணத் தொகையாக ரூ.510/- செலுத்த வேண்டும். பணத்தை செலுத்த ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
*படத்தை முழு ஹெ.டி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி H264 MP4 வடிவத்தில் அனுப்பவும். இதைத் தவிர வேறு எந்த ஒரு வடிவத்தில் அனுப்பப்படும் படங்கள் ஏற்கத்தக்கதல்ல.
* அனைத்து படைப்புகளும் பிஏஎல் (PAL) வடிவத்தில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். டிவிடி கோளாறு காரணமாக குறும்படம் திரையிடப்படவில்லை என்றால் விழா ஏற்பாட்டாளர்கள் அதற்கு பொறுப்பாக மாட்டார்கள்.
* குறும்படங்கள் அனைத்துமே டி.வி.டியில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஒவ்வொரு டி.வி.டியிலும் தலைப்பு, படத்தின் நேரம், பதிவு எண் ஆகியவை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
*இந்த குறும்பட விழாவில், அறிவியல் புனைவுக் கதைகள் என்ற ஒரே ஒரு பிரிவுக்கு மட்டுமே அனுமதி இருக்கிறது.
*ஸ்டாக் ஃபுட்டேஜுகள் பயன்பாடுகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். 10 நொடிகளில் இருந்து 12நொடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஸ்டாக் ஃபுட்டோஜுகள் படத்தின் பார்வைக்கு வேறுபட்டு இருந்தால் அப்படம் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்படும்.
*பிராந்திய மொழி மற்றும் அந்நிய மொழிய படங்களுக்கு ஆங்கில சப் டைட்டில் வழங்குவது மிகவும் அவசியம்.
*தனிநபராகவோ அல்லது குழுவாகவோ இணைந்து படங்களை அனுப்பலாம்.
*அஷ்மிதா குறும்பட திருவிழாவுக்கு தேர்வு செய்யப்படுங்கள் தெரிவுக்குழுவின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ, பிரிவையோ, மதத்தையோ அல்லது உட்பிரிவையோ சேர்ந்தவர்களை காயப்படுத்தும் கருத்தாக்கம் உள்ள படங்கள், இனவாதத்தை தூண்டும் படங்கள் நிராகரிக்கப்படும்.
*தெரிவுக்காக அனுப்பப்படும் புகைப்படங்கள், ஒலிப்பேழைகள் அஷ்மிதாவுக்கே உரித்தானதாகும்.
*தெரிவுக்காக அனுப்பப்படும் டிவிடியே இறுதியானதாக கருதப்படும். முன்பதிவுக்குப் பின் டிவிடிக்களை மாற்ற இயலாது.

 

குறும்படங்களுக்கான மதிப்பீடு கீழ் வரும் அடிப்படையில் வழங்கப்படும்
* இயக்கம் – திரைக்கதை- 20 மதிப்பெண்
* ஒளிப்பதிவு – 20 மதிப்பெண்
* எடிட்டிங் – ஒலி வடிவம் – 20 மதிப்பெண்
* கலை இயக்கம் – படப்பிடிப்பு தளம் – 20 மதிப்பெண்
* நடிகர்கள் தேர்வு, நடிப்பு – 20 மதிப்பெண்
* குழுக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகூட தங்கள் படைப்பை பதிவு செய்யலாம். ஆனால், ஒவ்வொரு தனிப்பதிவுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.
* தெரிவு செய்யப்பட்ட குறும்படத்தை விழா முடியும் வரை திரும்பப்பெற முடியாது.
* போட்டியில் பங்கேற்பவர்கள் விதிமுறைகளை பின்பற்ற இணங்குவதாக கருதப்படுகிறது.
சில முக்கிய குறிப்புகள்:
* டிவிடிக்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 10 பிப்ரவரி 2016

* டிவிடிக்கள் தொலைந்துபோனாலோ அல்லது யாராவது அவற்றை களவாடிவிட்டாலோ அதற்கு அஷ்மிதா குறும்பட விழா ஏற்பாட்டாளர்கள் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டார்கள்.

* போட்டியாளர்கள் தங்கள் குறும்படங்களை அஷ்மிதாவின் யூடியூபிலும் பதிவேற்ற வேண்டும். அதற்கான பிரத்யேக பாஸ்வார்ட் பின்னர் வழங்கப்படும்.

* இப்போட்டி திறமையான இயக்குநர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

* போட்டிக்காக அனுப்பப்படும் பதிவுகளை பெற்றதற்கான ஒப்புதல் ஆன்லைனில் விநியோகிக்கப்படும்.

* இறுதிக்கட்ட திரையிடல் மற்றும் விருதுகள் வழங்கு விழா வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் பிப்ரவரி 13ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தமிழ் திரையுலகில் இருந்து பல்வேறு முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
பதிவுகளை அனுப்பும் முன் கவனிக்க வேண்டியவை:

* டிவிடி பிரதியில் பதிவு எண் சுட்டப்பட வேண்டும்.

* info@asmitaedu.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பி தகவல் படிவத்தை பெற்றுக் கொள்ளவும்

* info@asmitaedu.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஸ்டில்களின் சாஃப்ட் காப்பியை அனுப்பவும் ( குறைந்தபட்சம் 2 ஸ்டில்ஸ்-4×6 என்ற அளவில் இருக்க வேண்டும்) அதில் உங்கள் பதிவெண்ணை வழங்கவும்.

* info@asmitaedu.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு – படத்தின் போஸ்டரின் சாஃப்ட் காப்பியை அனுப்பவும். அதிலும் தவறாமல் பதிவெண்ணை குறிப்பிடுக
குறிப்பு: நீங்கள் அளித்த இமெயில் முகவரி, தொலைபேசி எண் வாயிலாகவே அனைத்து தொடர்புகளும் மேற்கொள்ளப்படும்.

நீங்கள் உங்கள் படத்தை கொரியர் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி 17A, பசும்பொன் முத்துராமலிங்கம் தெரு, ராஜாஜி காலனி, சாலிகிராமம், சென்னை- 600093
www.asmitaedu.org | Email: info@asmitaedu.org | தொலைபேசி எண்கள்: 044-23455796, 044-43524611, +919487526009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *