அர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் சித்திக் இயக்குகிறார்

நயன்தாரா, மம்மூட்டி நடிக்கும் முன்னணி மலையாள பட இயக்குநரான சித்திக் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்த படம் பாஸ்கர் தி ராஸ்கல்.இந்தப் படம் தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை இயக்கிய சித்திக் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தையும் இயக்குகிறார்.

இவர் தமிழில் ஏற்கனவே விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ், விஜயகாந்த், பிரபுதேவா நடித்த எங்கள் அண்ணா மற்றும் விஜய், அசின் நடித்த காவலன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர்.பாஸ்கர் ஒரு ராஸ்கல்- இயக்குநர் சித்திக் தமிழில் இயக்கும் நான்காவது படம்.

இந்தப் படத்தை ஹர்சினி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஹர்சினி தயாரிக்கிறார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாகஅமலா பால் நடிக்கிறார்.மற்றும் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார்.முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதுகிறார்.பா.விஜய், விவேகா பாடல்கள் எழுத, அம்ரேஷ் இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன்

எடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர்

புரொடக்ஷன் டிசைனர் :  மணி சுசித்ரா

ஆர்ட் : ஜோசப் நெல்லிகன்

சண்டை பயிற்சி:  பெப்சி விஜயன்

நடனம் : பிருந்தா

Executive Producer  : விமல்.ஜி

தயாரிப்பு : எம்.ஹர்சினி

இயக்கம்  : சித்திக்

இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் துவங்கி சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தை செப்டம்பர் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *